முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம்
ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை, இந்தியாவின் கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் கச்சதீவு அமைந்துள்ளது.

வருடாந்த பெருவிழாவின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்
வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில்
இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி

இலங்கை கடற்படை தீவிரம்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய,
வட கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ்,
உள்கட்டமைப்பு பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

இதில் சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சாலைகள், இறங்குதுறைகள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், அதுமட்டுமல்லாமல், வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை இலங்கை கடற்படை அனுப்ப உள்ளது.

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

படகு சேவை

இதேவேளை, இந்த வருடாந்த உற்சவத்தில் பெருமளவிலான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

காங்கேசன்துறையிலிருந்து தேவாலயத்திற்குத் தேவையான உபகரணங்களை பாதிரியார்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படையினர் செய்துள்ளனர்.

அத்துடன் குறிகாட்டுவான், கச்சத்தீவு படகு சேவை மற்றும் நெடுந்தீவு படகுசேவை என்பன இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் | Kachchathivu Prepares For The Annual Festival

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள வீடுகள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்