Home சினிமா சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் காதல் சந்தியா… எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் காதல் சந்தியா… எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

0

காதல் சந்தியா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போது சினிமா பக்கம் காணவில்லை.

அப்படி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஒரு நாயகி சீரியலில் களமிறங்கப்போகும் தகவல் தான் வந்துள்ளது. அது வேறுயாரும் இல்லை காதல் சந்தியா தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் நடிப்பில் கடைசியாக 2016ம் ஆண்டு ருத்ரவதி என்ற படம் வெளியாகி இருந்தது.

புதிய சீரியல்

சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்பம் குழந்தை என கவனித்து வந்த காதல் சந்தியா இப்போது சீரியலில் வர உள்ளார்.

ஆனால் தொடர்ந்து வருவாரா என்றால் சந்தேகம் தான். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மனசெல்லாம் சீரியலில் தான் காதல் சந்தியா ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

NO COMMENTS

Exit mobile version