காஜல் அகர்வால்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் காஜல் அகர்வால்.
தமிழில் விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அகில்-ஜைனப் வயது வித்தியாசம் இவ்வளவா?
பிஸியாக நடித்துக்கொண்டு வந்தவர் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.‘
திருமணத்திற்கு பின் இந்தியன் 3, கண்ணப்பா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர சொந்தமாக நகைகள் தயாரிப்பு, அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் கவனித்து வருகிறார்.
புதிய அவதாரம்
காஜல் அகர்வால் தற்போது நடிப்பை தாண்டி இயக்குனர் அவதாரம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது கமர்ஷியல் படம் ஒன்றை இயக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
