Home சினிமா மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள பிரபாஸின் கல்கி 2898ஏடி.. இத்தனை கோடி வசூல் வேட்டையா?

மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள பிரபாஸின் கல்கி 2898ஏடி.. இத்தனை கோடி வசூல் வேட்டையா?

0

கல்கி 2898ஏடி

இன்று கோலாகலமாக கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், ஆனால் இந்த படத்திற்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் கல்கி 2898ஏடி.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பலர் நடித்திருந்தனர்.

மகாபாரதத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அமைந்த VFX ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.

பட வசூல்

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இந்த படம் ரிலீஸ் ஆன நாள் முதல் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் படம் மொத்தமாக இதுவரை ரூ. 1000 கோடியை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/kalki-2898-ad-movie-bo-collection-1720758388

NO COMMENTS

Exit mobile version