Home இலங்கை அரசியல் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காஞ்சனவின் பெயர்!

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காஞ்சனவின் பெயர்!

0

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரோஹித கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கூட்டம் கொஸ்வத்தையில் உள்ள மதுர விதானகேயின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version