Home இலங்கை அரசியல் எரிபொருள் விலை குறைப்பு : அநுர அரசுக்கு சவால் விடும் கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விலை குறைப்பு : அநுர அரசுக்கு சவால் விடும் கஞ்சன விஜேசேகர

0

அநுர தலைமையிலான அரசாங்கம் எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் அரச துறை சம்பளம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara), அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நவம்பர் 1 ஆம் திகதிக்குள் கணிசமான எரிபொருள் விலையை குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விஜேசேகர அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் இட்டபதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   

அனைத்தும் பொய் 

இதேவேளை தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக அன்று எதிர்க்கட்சியில் இருந்த தேசிய மக்கள் சக்தி கூறியது அனைத்தும் பொய் என்பதை கடந்த எரிபொருள் விலை திருத்தம் நிரூபிப்பதாக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை(matara) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுரவின் சட்டைப்பைக்குள் செல்கிறதா எரிபொருள் பணம்

அன்று எரிபொருள் பணம் தனது சட்டைப் பைக்குள் சென்றால், இன்று அதே பணம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அநுர குமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayake) சட்டைப் பைக்குள்ளும் சென்றிருக்க வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விற்பனை தொடர்பான உண்மையைப் புரிந்து கொண்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய குழுக்களால் விமர்சிக்கப்பட்ட விடயங்களில் உண்மையும் பொய்யும் தற்போது மக்களுக்கு தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version