Home இலங்கை சமூகம் கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பல நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்.

நகரத்தில் உள்ள பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதைகள் தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும், அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த சுரங்கப்பாதைகள் அசுத்தமாகியுள்ளதோடு அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் மற்றும் யாசகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் 

அதனால்தான் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு சலுகைக் காலத்தை வழங்குவோம், அதன் பிறகு அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு யாசகர்கள் அகற்றப்படுவார்கள்.

இது நடைமுறைக்கு வந்ததும், பாதசாரிகள் நியமிக்கப்படாத பகுதிகளிலிருந்து வீதிகளை கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

செயல்படுத்துவதற்கான சரியான காலக்கெடு காவல்துறையினருடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார். 

NO COMMENTS

Exit mobile version