முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்பால் ஏற்படப்போகும் பேரழிவு: உடன் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை

கிழக்கிலங்கையில் ஆயுதம் ஏந்திய கருணா-பிள்ளையான் தரப்பினர் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை எனவும் ஈரோஸ் (ஈழம் புரட்சிகர மாணவர் ஒன்றியம்) அமைப்பின் தலைவர் ஆர்.பிரபா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மார்ச் 31 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள்

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கையிருப்பு உள்ளது, அந்த கையிருப்புகளை என்னால் கண்டுபிடிக்க முடியும்.

கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்பால் ஏற்படப்போகும் பேரழிவு: உடன் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை | Karuna Pillayan Faction In Eastern

கிழக்கு மாகாணத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் அல்பாடா, அபுஜியாத் மற்றும் ஜியாட் குழுக்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 10 கைத்துப்பாக்கிகளை வழங்கினால் தமது குழு ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியும் என ஈரோஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்

“கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தையும் நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், எங்கள் அமைப்பான ஈரோஸ் 10 உறுப்பினர்களுக்கு 10 கைத்துப்பாக்கிகளை வழங்கவும். அப்போது நான் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பேன்.அல்ஃபதா, அபு ஜியாத், ஜியாத், பிள்ளையான் குழுவினர் எல்லாம் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை என்னால் கண்டுபிடிக்க முடியும்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் தற்போது ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அவருக்கு வழிகாட்டியாக இருந்த ஞானத்தின் உதவியால் அவர் புத்தகத்தை எழுதியிருக்கலாம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு

பிள்ளையான் பற்றிய பல தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாக நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்பால் ஏற்படப்போகும் பேரழிவு: உடன் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை | Karuna Pillayan Faction In Eastern

பிள்ளையான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்தச் சிறைச்சாலையில் சஹரானின் உறவினர்கள் என்று கூறப்படும் தாடி வைத்த இருவர் உறவுமுறையில் இருந்ததாக பிள்ளையானே குறிப்பிட்டார். அந்த இரண்டு பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறியிருந்தார்.

கனடாவில் தமிழ் இளைஞனை நிராகரித்தாரா அனுர...! வெடித்தது சர்ச்சை

கனடாவில் தமிழ் இளைஞனை நிராகரித்தாரா அனுர…! வெடித்தது சர்ச்சை

அப்படியென்றால் பிள்ளையான் வெகுநேரம் கோமா நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாரா இன்று கிழக்கு மாகாண மக்கள் உணவின்றி வெயிலில் வறட்சியால் தவித்து வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். இவை அனைத்திற்கும் எதிர்காலத்தில் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன.

ரணில் இந்த நாடு இன்று பெற்றுள்ள ஒரு பாக்கியம்

ரணில் விக்ரமசிங்க இந்த நாடு இன்று பெற்றுள்ள ஒரு பாக்கியம். இன்னும் ஐந்து வருடங்களுக்கு அவர் இந்த நாட்டின்அதிபராக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். அவரால் மட்டுமே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். அவரால் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிக்க முடியும். சர்வதேச உறவுகளின் அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும்.

கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்பால் ஏற்படப்போகும் பேரழிவு: உடன் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை | Karuna Pillayan Faction In Eastern

போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஆளுநராக செந்தில் தொண்டமானை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அவரைப் போன்ற இந்தியாவுடன் தொடர்புள்ள ஒருவர் எங்கள் மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

செந்தில் தொண்டமானின் பின்னணி

ஆனால் இந்த மாகாணம் எங்கே வளர்ந்தது? தற்போதைய ஆளுநர் என்ன செய்கிறார் தெரியுமா? 1940 ஆம் ஆண்டு மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. மலையில் குளிரிலும் மழையிலும் தவித்து தோட்டங்களில் பணிபுரியும் மக்கள் இந்த தொழிற்சங்கத்திற்கு மாதா மாதம் நிதி வழங்கினர்.

இன்றும் இந்த தொழிற்சங்கத்திற்கு இவ்வாறுதான் நிதி வழங்கப்படுகிறது.

கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்பால் ஏற்படப்போகும் பேரழிவு: உடன் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை | Karuna Pillayan Faction In Eastern

எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ் செல்லும் அனுர

எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ் செல்லும் அனுர

எனவே இன்று இந்த தொழிற்சங்கத்தின் கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கணக்குகளில் பல ஆயிரம் கோடி பணம் உள்ளது. இவ்வாறான பணக் கணக்குகளை கையாண்ட செந்தில் தொண்டமான் போன்ற ஒருவர் இந்த மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மௌபிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்