Home இலங்கை சமூகம் கச்சதீவு மதவழிபாட்டுத் தலமே தவிர சுற்றுலாத் தலமல்ல! யாழ். ஆயர் எதிர்ப்பு

கச்சதீவு மதவழிபாட்டுத் தலமே தவிர சுற்றுலாத் தலமல்ல! யாழ். ஆயர் எதிர்ப்பு

0

கச்சதீவை சுற்றுலாத் தலமொன்றாக மாற்றும் அரசாங்கத்தின் முனைப்பு குறித்து யாழ். மறைமாவட்ட ஆயர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்திரு ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

 கச்சதீவு

கச்சதீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் வழிபாட்டுத்தலமொன்றாகும்.

அந்த வகையில் கச்சதீவு என்பது ஒரு மதவழிபாட்டுத் தலமொன்றாகும்.

அவ்வாறான ஒரு மதவழிபாட்டுத்தலத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற முனைவது வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version