Home இலங்கை குற்றம் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

0

கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகமொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொடை செல்லும் வீதியில் உள்ள ஆண்டி அம்பலம, தெவமொட்டாவை பிரதேசத்தில் இன்று காலை ஒன்பதரை மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன் போது துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

பொலிசாரின் துரித முயற்சியின் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

​ மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version