Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி : பயணிகளுக்கு எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி : பயணிகளுக்கு எச்சரிக்கை

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வங்கி அமைந்துள்ள பகுதியில் பணப் பரிமாற்றம் செய்யும் போர்வையில் சுற்றித் திரிந்து பயணிகளின் பயணப்பொதிகளை திருடும் தம்பதியை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் மற்றும் 35 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.


தம்பதி கைது

தனது மனைவியின் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தம்பதி வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிப் பகுதிக்கு வருகைத்தந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொருட்களை வைத்துவிட்டு, வெளிநாட்டு நாணயத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றும் போது, ​​அவர்களின் கவனம் பணப் பரிமாற்றத்தின் மீது திரும்பும் வரை காத்திருக்கின்றனர்.

கவனம் திசை திரும்பியவுடன் பயணிகளின் பைகளை எடுத்துக் கொண்டு இந்த தம்பதி தப்பி சென்று விடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version