Home சினிமா நடிகர் கவினின் பல வருட கனவை நிறைவேற்றிய அனிருத்.. மகிழ்ச்சியில் கவின்

நடிகர் கவினின் பல வருட கனவை நிறைவேற்றிய அனிருத்.. மகிழ்ச்சியில் கவின்

0

கவின்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த டாடா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து, கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகை அன்று வெளியான திரைப்படம் பிலடி பெக்கர்.

அறிமுக இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் முதன் முதலாக நெல்சன் திலீப்குமார் தயாரித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

நடிகை மிருணாள் தாகூரின் அடுத்த படத்தின் அதிரடி அப்டேட்.. ஹீரோ இவரா?

 

மகிழ்ச்சியில் கவின் 

தற்போது, கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கவின் அவரது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாக உள்ளது. ஜென் மார்ட்டின் இசையில் அனிருத் குரல் கொடுத்துள்ள
இதன் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்து, தன் பல வருட கனவு நிறைவேறியது, அதற்கு மிகவும் நன்றி அனி. என பதிவிட்டுள்ளார்.       

NO COMMENTS

Exit mobile version