கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி, ஹன்டெஸ்ஸாவைச் சேர்ந்த 24 வயதுடைய எச்.எம்.எல்.டி. ஜெயதிலகா என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்புப் பல்கலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை இந்த மாணவி பயின்று வந்துள்ளார்.

இந்தநிலையில், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த ஐந்தாம் திகதி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, ஆறாம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் தனது வீட்டில் உள்ள குளியலறையில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) உயிரிழந்துள்ளார்.

முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

