நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் நடந்து முடிந்தது. 15 வருடமாக தான் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை அவர் கரம்பிடித்தார். முதலில் ஹிந்து முறைப்படி திருமணம், அதனை தொடர்ந்து கிறிஸ்தவர் முறைப்படி திருமணம் நடந்தது.
திருமணத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தாலி உடன் படவிழாவில்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்று பேபி ஜான் பட விழாவுக்கு வந்திருக்கிறார். அவர் கழுத்தில் தாலி உடன் மாடர்ன் லுக்கில் வந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வைரலாகும் வீடியோ இதோ..