முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்கள்

அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே விசாரணைகளின் போது பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

துருக்கிக்கு செல்ல திட்டம்

இந்தநிலையில்,  துருக்கிக்கு சென்று பதுங்கியிருக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகத் விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது என அவர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்கள் | Kehelbadare Padme Try To Move Turky

பொலிஸ் துணை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகலவிடம் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

 மேலும், அதிகாரிகள் தம்மை கைது செய்வார்கள் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் தமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்ததாகவும் பத்மே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனால் துருக்கிக்கு சென்று அங்கு  தலைமறைவாகியிருக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகக் அவர் தெரிவித்தார். 

இருப்பிடத்தை மாற்றியும் பலனில்லை..

இதேவேளை, உலகில் இருபது நாடுகளில் தாம் தங்கியிருந்தாகவும் அவற்றில் இந்தோனேசியாவே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்கள் | Kehelbadare Padme Try To Move Turky

இலங்கையை விடவும் இந்த நாடு 29 மடங்கு பெரியது எனவும் பெரிய சனத்தொகையை கொண்ட நாடு எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை எனவும் கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், இந்த பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.