Home இலங்கை சமூகம் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைது! இந்தோனேசிய பொலிஸாருக்கு இலங்கையில் அதியுயர் கௌரவம்

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைது! இந்தோனேசிய பொலிஸாருக்கு இலங்கையில் அதியுயர் கௌரவம்

0

பாதாள உலக் குழுவினைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ்  அதிகாரிகளுக்கு இலங்கை பொலிஸாரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராட்டுக்களை தெரிவித்தார். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள் 

மேலும், இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு நினைவுச்சின்னங்களும் இலங்கை பொலிஸாரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நேற்று இரவ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 

சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளையும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகளையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது பாதுகாப்பு   அமைச்சர்  ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version