பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் துணை
ஆய்வாளரை(SI)குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தோனேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பத்மே
மற்றும் நான்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர்களுடன், அந்த அதிகாரி
உறவைப் பேணி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பாதாள உலக வலையமைப்பில், குறித்த அதிகாரியின் தொடர்பு எந்த
அளவிற்கு உள்ளது என்பது குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
