முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கெஹெலியவின் தரமற்ற மருந்தை எம்.பிக்களுக்கு ஏற்ற வேண்டும்! ஜனக ரத்நாயக்க ஆவேசம்

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த தரமற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று ஜனக ரத்நாயக்க ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரும் பொதுமக்கள் கையெழுத்து வேட்டையொன்று இன்று காலை கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய சிவில் அமைப்பு முன்னணி மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைந்து கெஹெலியவுக்கு எதிரான கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது.

பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: இருவர் வைத்தியசாலையில்

பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: இருவர் வைத்தியசாலையில்

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து  வெளியிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

கெஹெலியவின் தரமற்ற மருந்தை எம்.பிக்களுக்கு ஏற்ற வேண்டும்! ஜனக ரத்நாயக்க ஆவேசம் | Keheliya Rambukwella Resignation

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுமக்களும் அவர் தொடர்பில் சிறந்த முடிவை எடுப்பார்கள்

கெஹெலிய ரம்புகெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்

கெஹெலியவைப் பாதுகாப்பதற்காக முன்னின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் கெஹெலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் ஜனக ரத்நாயக்க இங்கு ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்