கென்யாவில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவின் மேற்கு மாகாணமான எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் உலங்கு வானூர்தி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி
விசாரணைக் குழு
இதில் பயணித்த இராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதி உயிரிழந்ததை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தொலைகாட்சி வாயிலாக உரையாற்றும் போது உறுதிப்படுத்தினார்.
இந்த விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: டயனா கமகே பகிரங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |