கிளிநொச்சி – கல்லாறு பகுதியிலிருந்து பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கஞ்சா பொதிகள் மீட்பு
இந்தன சந்தர்ப்பத்தில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து சுமார் 26 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
