Home இலங்கை சமூகம் முல்லைத்தீவிலிருந்து கடத்த முற்பட்ட கேரள கஞ்சா மீட்பு – சாரதி தப்பியோட்டம்

முல்லைத்தீவிலிருந்து கடத்த முற்பட்ட கேரள கஞ்சா மீட்பு – சாரதி தப்பியோட்டம்

0

முல்லைத்தீவு சாலை பகுதியில் இருந்து கடத்த முற்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா
மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும்
கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை (17.12.2025) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி தப்பியோடியுள்ளார்.

கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

கடல் வழியாக
கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா தரைவழி பாதை ஊடாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த
கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தில் ஏற்றப்பட்ட கஞ்சாவும், வாகனமும் மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளார்.

சாலைப்பகுதியில் உள்ள கடற்படையினரின் தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை முன்னெடுப்பு

இதன்போது கஞ்சாவும், வாகனமும்
மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வாகனம் யாழ்ப்பாணம், கிளாலி பகுதியினை சேர்ந்தவருடையது என தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

மேலதிக தகவல் – ஷான்

NO COMMENTS

Exit mobile version