கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்றதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரிக்க அனுமதி
மாணவியை கடத்தி கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் பொலிஸாரினால் சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதவான் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார்.
