Home இலங்கை சமூகம் பரபரப்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்! சிறீதரன் – இளங்குமரனுக்கிடையே வெடித்த வாக்குவாதம்

பரபரப்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்! சிறீதரன் – இளங்குமரனுக்கிடையே வெடித்த வாக்குவாதம்

0

கிளிநொச்சியில் இன்றையதினம்(6) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(6) கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமானது.

குறித்த கூட்டத்தில் சிறிதரனுக்கு கதைக்க சந்தர்ப்பம் வழங்காமல்  இளங்குமரன் தனது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருந்த போதே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பலர் பங்கேற்பு

காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றபோதே இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, மக்களுக்கான பிரச்சினைகளை கலந்துரையாடுமாறும் தேவையற்ற விடயங்களை கதைக்க வேண்டாம் எனவும் விவசாய திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம்
வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணிய முரளிதரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
ரஜீவன், விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், சுகாதார
வைத்திய அதிகாரி, கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின்
அதிகாரிகள், விவசாயிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பலரும்
கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version