சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட குற்ற விசாரணை
பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பெண்ணின் சடலம் கரையொதுங்கியது.
மேலதிக விசாரணை
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இதனடிப்படையில் நேற்றுமுன்தினம்(3) யாழ்ப்பாணத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவர் கொலைக்கு
பயன்படுத்திய காரையும் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 28 வயதானவரே கைது
செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
