முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் : பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு தகவல்

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது இந்த புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அரசருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில்,

‘புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது மேலும் சில பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளது.

மன்னர் விரைவில் குணமடைந்து

இதற்காக மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மன்னர் சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் : பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு தகவல் | King Charles Diagnosed With Cancer

நிரம்பிவழியும் சிறைச்சாலைகள் : எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

நிரம்பிவழியும் சிறைச்சாலைகள் : எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

எனினும் சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை அரசர் வழக்கம் போல் மேற்கொள்வார். மன்னர் விரைவில் குணமடைந்து பொதுபணிக்கு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்