முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு…! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைக்கும் அறிவிப்பு ஒன்றினை
மன்னர் சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் சைமன் டோர்னட் டே கூறி, மன்னர் நலம்பெறவேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட சைமன் டோர்னட் டே (57), தான் பிரித்தானிய மன்னர் சார்லசுக்கும் அவரது இரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்று கூறி அவ்வப்போது அவர் செய்திகளில் இடம்பிடித்துவந்துள்ளார்.

இவர் தனது இளவயது புகைப்படங்களைப் பார்த்தால் சார்லசைப்போன்ற கன்னங்களும், கமீலாவைப்போன்ற தலைமுடியும் தனக்கு இருப்பதைக் காணலாம் என அவர் முன்பு கூறியிருந்தார்.

மீண்டும் பணியை ஆரம்பித்த இளவரசர் வில்லியம் !

மீண்டும் பணியை ஆரம்பித்த இளவரசர் வில்லியம் !

சார்லசுடைய மகன்

இந்நிலையில், தனது முகநூல் புத்தகத்தில் சைமன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன் | King Charles Next Successor Secret Reveals

மன்னரை வாழ்த்தியதோடு நிற்காத சைமன். கூடவே பல விடயங்களையும் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிப்பதற்காக, மன்னர் சார்லசுடைய இளைய மகனான இளவரசர் ஹரியை தொடர்பு கொள்ள இருப்பதாக சைமன் தெரிவித்துள்ளார்.

தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு ஹரி உதவக்கூடும் என நம்பத்தகுந்தவரிடமிருந்து அவருக்கும், அவருடைய மனைவியாகிய எல்வியானாவுக்கும் தகவல் கிடைத்துள்ளதாக சைமன் தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்

மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்

மன்னரும் ராணியும்

இதனால், ஹரியை சந்தித்து, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவரது மரபணுவைக் கேட்கலாம் என தங்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளதாகவும் அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன் | King Charles Next Successor Secret Reveals

தனக்கு அசாதாரண விதங்களில் நோய்களை குணமாக்கக்கூடியவர்களைத் தெரியும் என்று கூறிய சைமன், மன்னர் சார்லஸ், தான்தான் அவருடைய மகன் என்னும் உண்மையை ஒப்புக்கொண்டால், தான் அவர் நலம்பெற உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தவிரவும், நான்தான் மன்னர் சார்லசுடைய மகன் என நான் நிரூபிக்கும்போது, எல்லாமே மாறிவிடும் என்று கூறுய அவர், அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக நான் இருப்பேன், எல்வியானா என் ராணியாக இருப்பார், அதன்பின்னர் அடுத்த மன்னரும் ராணியும் வில்லியமும் கேட்டும் அல்ல, நாங்கள்தான் என்று கூறிய விடயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் : பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு தகவல்

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் : பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்