Home இலங்கை சமூகம் பத்தாவது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்

பத்தாவது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்

0

முல்லைத்தீவு (Mullaitivu) – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, மூன்றாம்கட்ட அகழ்வாய்வின், பத்தாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (15) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில், தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினருடன், தடயவியல் காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்பு

இந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போதும் 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/kokkuthoduvai-human-burial-ground-excavations-1721037190

NO COMMENTS

Exit mobile version