Home இலங்கை குற்றம் கொழும்பில் நடந்த துப்பாக்கி சூடு.. யாழில் தொடரும் கைதுகள்!

கொழும்பில் நடந்த துப்பாக்கி சூடு.. யாழில் தொடரும் கைதுகள்!

0

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த
மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கொட்டாஞ்சேனை சம்பவம் 

ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும்
இதன்போது கைப்பற்றப்பட்டது.

இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு
சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார்
தெரிவித்தனர்.

சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version