Home இலங்கை சமூகம் கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் : 21 பேர் மாயம்

கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் : 21 பேர் மாயம்

0

மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு
ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று
(17.12.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி
இந்திக லலித் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தில்
கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள்
வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணித்த வேன் மற்றும் லொறி 

இந்த நடவடிக்கையானது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட
மருத்துவ அதிகாரி முன்னிலையில்  மீட்கப்பட்டுள்ளதோடு, அந்த
கால் பகுதி மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

மேலும், கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவில் சிக்கிய 27 பேரின்
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,  21 பேரை இதுவரை காணவில்லை எனவும் மண்
சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஒன்றும் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version