சூரி
காமெடி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று பலரால் பாராட்ட பட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி.
இவர் அந்த படத்தை தொடர்ந்து ஹீரோவாக கருடன் படத்தில் நடித்தார் இப்படத்தில் வெறித்தனமான தன் நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
கொட்டுக்காளி வசூல்
அதை தொடர்ந்து, பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் – 23 வெளிவந்த கொட்டுக்காளி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து மலையாள நடிகை அன்னா பென் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, கொட்டுக்காளி திரைப்படம் மூன்று நாளில் ரூ.1.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.
Source: https://cineulagam.com/article/kottukkaali-movie-three-days-box-office-collection-1724646468
