குடும்பஸ்தன்
அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குடும்பஸ்தன்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் மணிகண்டன். ஜெய் பீம், குட் நைட், லவ்வர் என இதுவரை இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே தரமாக இருந்துள்ளது.
யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் 2023ல் குட் நைட், 2024ல் லவ்வர் அதை தொடர்ந்து 2025ல் குடும்பஸ்தன் என ஹீரோவாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார்.
வசூல்
குடும்பஸ்தன் திரைப்படம் 6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Source: https://cineulagam.com/article/kudumbasthan-movie-box-office-collection-1738214133
