Home இலங்கை குற்றம் குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: தேடப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: தேடப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு

0

காணாமல்போனதாக கூறப்படும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரை கடத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் இன்று மாத்தளை, வில்கமுவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தினை செலுத்தி வந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற இளம் வர்த்தகர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காதலி தலைமறைவு

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞனின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/kuliyapitiya-boy-missing-case-investigation-1714827703

NO COMMENTS

Exit mobile version