முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் துருப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்.. தீவிரமடையும் லொஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்!

லொஸ் ஏஞ்சல்ஸில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், பொலிஸார் மக்களைக் கைது செய்யும் வரை தடுத்து வைக்க அதிகாரம் பெற்றுள்ளனர் என்று துருப்புக்களின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றன, இதன் காரணைமாக நூற்றுக்கணக்கான கடற்படையினர் நகரத்திற்குள் செல்லத் தயாராகி வருகின்றனர். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் கலிபோர்னியாவிலிருந்து பிற அமெரிக்க நகரங்களுக்கும் பரவியுள்ளன.

 நூற்றுக்கணக்கான போராட்டங்கள் 

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் நாடு தழுவிய நூற்றுக்கணக்கான போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ட்ரம்பின் துருப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்.. தீவிரமடையும் லொஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்! | La Update Today Trump Troop

கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசமின் ஆட்சேபனைகளை மீறி லொஸ் ஏஞ்சல்ஸுக்கு துருப்புக்களை அனுப்ப ட்ரம்ப் எடுத்த முடிவு, அமெரிக்க மண்ணில் இராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு தேசிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

நியூசம் நிர்வாகம், இந்த நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
ட்ரம்ப் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு உத்தரவிட்டுள்ள 700 கடற்படையினருக்கும் 4,000 தேசிய காவல்படையினருக்கும் கைது அதிகாரம் இல்லை என்று துருப்புக்களுக்குத் தலைமை தாங்கும் அமெரிக்க இராணுவ மேஜர் ஜெனரல் ஸ்காட் ஷெர்மன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், கூட்டாட்சி பணியாளர்கள் அல்லது சொத்துக்களைப் பாதுகாக்கும் தங்கள் பணியை நிறைவேற்ற, தேவைப்பட்டால், சட்ட அமலாக்க அதிகாரிகள் அவர்களைக் கைது செய்யும் வரை, தனிநபர்களை தற்காலிகமாகத் தடுத்து வைக்கும் அதிகாரம் இருப்பதாக ஷெர்மன் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.