Home இலங்கை சமூகம் நானுஓயாவில் தாழிறங்கியுள்ள நிலம்

நானுஓயாவில் தாழிறங்கியுள்ள நிலம்

0

நுவரெலியா பிர­தேச செய­ல­கத்­திற்கு உட்­பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம சேவகர்
பிரி­வி­லுள்ள மஹாஎலிய தோட்டத்தில்  தனி வீடு ஒன்று
திடீரென்று தாழிறங்கியுள்ளதுடன் தறை மற்றும் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள்
ஏற்பட்டுள்ளன. 

இதனால் குறித்த வீட்டில் வசித்த நான்கு பேர் அடங்கிய குடும்பத்தினரை, தற்காலிகமாக அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான முதற்கட்ட உதவிகளும் செய்து   கொடுக்கப்பட்டுள்ளன.  

பாரிய வெடிப்புக்கள்

வீட்டின் சுவர்கள் அனைத்திலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும்
சமையலறை உட்பட இரண்டு அறைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
வீட்டினைச் சுற்றி நிலம் வெடித்துள்ளதுடன் நிலம் தாழ் இறங்கியுள்ளதாக  வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

எனவே வீட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட முன் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version