Home இலங்கை சமூகம் நிலவும் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை (Badulla) மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டள்ளது.

you may like this


https://www.youtube.com/embed/TTrUSr7YR58

NO COMMENTS

Exit mobile version