Home இலங்கை சமூகம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை

இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று(16) இரவு 7.30 மணி முதல் இன்று இரவு 7.30 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம பிரதேசங்களுக்கும் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.     

Source: https://tamilwin.com/article/landslide-warning-for-3-districts-1723851350

NO COMMENTS

Exit mobile version