Home இலங்கை பொருளாதாரம் ஈரானுடனான கடன் மறுசீரமைப்பு: அரசாங்கம் விளக்கம்

ஈரானுடனான கடன் மறுசீரமைப்பு: அரசாங்கம் விளக்கம்

0

ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகையில் 35 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்தியுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

சர்வதேச பொருளாதாரத் தடை

ஈரான் மீது விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக கடனை மீளச் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் எரிபொருளுக்கான கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கை அரசாங்கம் 35 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்தியுள்ளது.

விரைவில் மேலும் பத்து மில்லியன் டொலர் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணெய்க்கு பதிலாக தேயிலை என்ற திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களே அவதானம்! வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version