Home இலங்கை குற்றம் பாதாள உலக மோதல்களால் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்: வெளியான தகவல்

பாதாள உலக மோதல்களால் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்: வெளியான தகவல்

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு எதிராக பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

பாதாள உலக மோதல்கள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் வர்த்தக உலகின் பெரும் புள்ளி, கொலை, கொள்ளை மற்றும் கப்பம் பெறுதல் என்று பல்வேறு கடும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய தோழர் மிதிகம லசா என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கொலையுடன், 03 உள்ளூராட்சி மன்றங்களின் 03 தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் தென் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பாதாள உலக மோதல்கள்

ஹிக்கடுவ நகரசபைத் தலைவர் காமினி பின்னதுவ 2003 ஆம் ஆண்டு நகரசபையில் தனது அலுவலகத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு, ஹிக்கடுவ பிரதேச சபை தலைவர் மனோஜ் மெண்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து 90 களில் இருந்து, உள்ளூராட்சி மன்றங்களின் 20 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலைகளில் பெரும்பாலானவை பாதாள உலக மோதல்கள் காரணமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைகளின் எண்ணிக்கை 

இதன்படி, அதிக எண்ணிக்கையிலான கொலைகள் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நடந்துள்ளன.

இவற்றில், கொழும்பு மற்றும் காலி பகுதிகளில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதைத் தவிர, பல மாகாண சபை உறுப்பினர்களும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சபை அமைச்சரான சுனில் மெண்டிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நாமல் குணவர்தன ஆகியோரும் பாதாள உலகக் கும்பலால் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைகளில் பெரும்பாலானவை பாதாள உலக மோதல்கள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக நடந்த பல கொலைகளும் உள்ளன.

NO COMMENTS

Exit mobile version