Home இலங்கை சமூகம் லாப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம்: புதிய விலைகள் குறித்து அறிவிப்பு

லாப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம்: புதிய விலைகள் குறித்து அறிவிப்பு

0

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்

இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,840 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோகிராம் எடையுள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/laufs-gas-price-in-sri-lanka-1714718393

NO COMMENTS

Exit mobile version