Home இலங்கை குற்றம் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்ற பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்ற பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

0

கேகாலை(Kegalle) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துணை பொலிஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில்
வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க  தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி மதுபோதையில், பொலிஸ் கெப் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது இரண்டு
சாலை விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் அதனை கண்டுக்கொள்ளாத அதிகாரி, நிறுத்தாமல்
கேப் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

பணிநீக்கம்

இதனையடுத்து வாரக்காபொல பொலிஸாரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அவர் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி இன்று(27) நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்படடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அதிபரின்
அறிவுறுத்தலின் பேரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version