Home இலங்கை சமூகம் இலங்கை வந்தடைந்த தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவர்

இலங்கை வந்தடைந்த தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவர்

0

Courtesy: Sivaa Mayuri

தாவூதி போஹ்ரா (Dawoodi Bohra) சமூகத்தின் தலைவரான சையத்னா முஃபத்தால் சைபுதீன், மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.

போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த 45 பயணிகளுடன் ஆன்மீகத் தலைவர் நேற்று இலங்கை வந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் மாநாடு 

இலங்கையில் இடம்பெறும் போஹ்ரா சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவிருக்கிறார்.

அத்துடன் ஜனாதிபதியையும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாவூதி போஹ்ரா என்ற செல்வந்த சமூகம் உலகளாவிய ரீதியில் வாழும் நிலையில், இலங்கையிலும் அந்த சமூகத்தினர் வாழ்கின்றனர்.
அதேநேரம் வருடந்தோறும் அந்த சமூகத்தின் மாநாடு உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. 

Source: https://tamilwin.com/article/leader-dawoodi-bohra-community-arrived-sri-lanka-1730084407

NO COMMENTS

Exit mobile version