Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: ரெலோவுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: ரெலோவுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி

0

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு
வருமாறு தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள்
எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை
ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடல்

குறித்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வுகள் இடம் பெறுவதால் தான்
கொழும்பில் நிற்பதாகவும் குறித்த திகதி ஒன்றில் குறித்த கலந்துரையாடலை
நடத்தலாம் எனவும் பதில் வழங்கியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலானது இந்தவார இறுதியில் இடம்பெற உள்ள நிலையில் ஏற்கனவே
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும்
இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version