Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல்
சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட
அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்.தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற
ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அமைதியான முறையில் வாக்களிப்பு

மேலும்
தெரிவிக்கையில், மட்டக்களப்பின் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற
தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து
வருகின்றனர்.

வாக்களிப்பு நேரம் முடிவடைந்த பின் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில்
வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.

பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும்
நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார
வாக்குகளும் எண்ணப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version