தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திற்குள் திருத்தம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் ஜனவரி மாதத்திற்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.
இதன்படி தேர்தல் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரியிருந்ததுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான முன்கூட்டிய வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.