Home சினிமா கூலி படத்தில் ரஜினியின் பழைய பட காட்சி உள்ளதா?… லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்

கூலி படத்தில் ரஜினியின் பழைய பட காட்சி உள்ளதா?… லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்

0

கூலி படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர்.

அப்படம் செம மாஸ் வெற்றிப்பெற லாபத்தில் ரஜினிக்கு கார் வாங்கி கொடுத்திருந்தனர். தற்போது ரஜினியின் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் அவருடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

ரூ. 375 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் பதில்

ரஜினியின் புதிய படங்களில் அவரது பழைய படங்களின் காட்சிகள் வைப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த கூலி படத்திலும் ரஜினியின் பழைய படங்களின் காட்சிகள் இருக்கிறதா என லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், அவரின் எந்த பழைய காட்சியையும் நாங்கள் Recreate செய்யவில்லை, ஆனால் அவருடைய பழைய ஸ்டைலை கூலி படத்தில் வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார். 

Source: https://cineulagam.com/article/lokesh-kanagaraj-about-coolie-movie-1748525517

NO COMMENTS

Exit mobile version