Home சினிமா இந்த ஆட்களை நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் உறுதி

இந்த ஆட்களை நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் உறுதி

0

லோகேஷ் கனகராஜ்

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினிகாந்துடன் முதல் முறையாக கூலி என்ற படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

லோகேஷ் கனகராஜ் என்றாலே எல்சியு அதாவது ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ தான் நினைவுக்கு வரும்.

தென்னிந்திய நடிகர் அப்படி நடந்துகொண்டார்.. மோசமான அனுபவம் குறித்து தமன்னா

லோகேஷ் உறுதி 

இந்நிலையில், லோகேஷ் அவருடைய எல்சியு குறித்தும் கைதி 2- ம் பாகம் குறித்தும் சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.

அதில், ” எல்சியு மையப்படுத்தி படம் எடுப்பதால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள படத்தில் நடித்த சின்னச்சின்ன நடிகர்கள், இறந்து போன நடிகர்கள் மீண்டும் இந்த படத்தில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு ஏன், எல்சியுவில் குரூப் டான்ஸ் ஆடிய அல்லது சண்டைக் காட்சிகள் நடித்த கலைஞர்கள் புதிதாக தயாராகும் எல்சியுவின் படத்தில் இல்லாதது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version