ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான கெஹெல்பத்தர பத்மேவின் தாயாருக்கு சொந்தமான லொறியொன்றை ரம்புக்கனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ரம்புக்கனை காவல்துறையினர் மூலம் நேற்று (20.11.2025) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த லொறி இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உரிமம் இல்லாமல் மணல் கடத்தலில் ஈடுபட்ட போது குறித்த லொறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மணல் கடத்தல்
உரிமம் இல்லாமல் மணல் கடத்தியதற்காக லொறியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது லொறி கம்பஹா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
ஜெயசிங்க ஆராச்சிகே மாலனி என்ற குறித்த பெண் கெஹல்பத்தர பத்மேவின் தாயார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

