Home இலங்கை சமூகம் மின்சார கம்பியில் சிக்கி பற்றியெரிந்த பாரவூர்தி

மின்சார கம்பியில் சிக்கி பற்றியெரிந்த பாரவூர்தி

0

தென்னை நார் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மின்சார கம்பியில் சிக்கி தீப்பிடித்ததில் பாரவூர்தியும் தென்னை நார் கையிருப்பும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக உடப்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டிற்கு தென்னை நார் ஏற்றுமதி செய்யும் பாரவூர்தி தொழிற்சாலையில் களஞ்சியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தென்னை நார் பாரவூர்தி

தென்னை நார் பாரவூர்தியின் உயரம் காரணமாக வீடொன்றுக்கு சென்ற மின்சார விநியோகத்தின் வயர் உடைந்து பாரவூர்தியின் மீது விழுந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

மின்சார வயருடன் பாரவூர்தி வீதிக்கு வந்ததால் தீ முற்றாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் பாரவூர்தியில் இருந்து தப்பிச் சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.

அதிகமான நஷ்டம்

தீயினால் தென்னை நார் இருப்பு மற்றும் பாரவூர்தி முற்றாக எரிந்து நாசமானதுடன் 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தென்னை நார் வியாபாரி தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதும், அப்பகுதி மக்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து பாரவூர்தி மற்றும் தென்னை நார் ஆகியவற்றை காப்பாற்ற முயன்றனர், ஆனால் அது தோல்வியில் முடிந்தது.   

NO COMMENTS

Exit mobile version