Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

0

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நிதிய சபை தெரிவித்துள்ளது.

இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம்கண்டு நலன்புரி வசதிகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

 இரண்டாம் கட்டப் பதிவு

அதன் பிரகாரம் தற்போதைக்கு நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவு தொடர்பான வழிகாட்டல் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது.

புத்தாண்டின் ஜனவரி மாதத்திற்குள்ளாக அதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று நலன்புரி நிதிய சபையின் பணிப்பாளர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

 

NO COMMENTS

Exit mobile version