Home சினிமா 7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

0

லப்பர் பந்து

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் முதல் முறையாக அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து.

இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட், ஜென்சன், பால சரவணன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல்

இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் லப்பர் பந்து படமும் இடம்பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக திரை வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.  

Source: https://cineulagam.com/article/lubber-pandhu-7-days-box-office-1727404493

NO COMMENTS

Exit mobile version